அம்னோ இளைஞர்கள் சிலாங்கூர் செயலகக் கட்டிடத்தின்மீது வாளிகளை விட்டெறிந்தனர்

protestசிலாங்கூர்   மாநிலத்தில்   நீர்  விநியோகத்    தடைக்கு   எதிர்ப்புத்   தெரிவித்த   ஒரு  குழு   காலி  வாளிகளை   சிலாங்கூர்  செயலகக்  கட்டிடத்தின்   மூடப்பட்ட     வாயில்   கதவுகளின்மீது   விட்டெறிந்தது.

அம்னோ  இளைஞர்   பகுதி   செயல்குழு   உறுப்பினர்   அர்மண்ட்  அழா  அபு  ஹனிபா  தலைமையில்  150-பேரடங்கிய   அக்கூட்டம்  செயலகக்  கட்டிடத்தின்முன்   ஆர்ப்பாட்டம்  செய்ததுடன்   அதன்   வாயில்  கதவுகளையும்  பிடித்து   உலுக்கியது.

செமின்யி   நீர்   சுத்திகரிப்பு   ஆலை  மூடப்பட்டதால்    கிள்ளான்   பள்ளத்தாக்கில்   பல    இடங்களில்      நீர்   விநியோகம்   தடைப்பட்டிருந்தது.    அந்த   ஆலை  மறுபடியும்   செயல்படத்   தொடங்கியதை    அடுத்து   நேற்று  முதல்   நீர்  விநியோகம்  மீண்டும்  தொடர்கிறது.

நீர்  மாசுபட்டிருந்ததால்   சுத்திகரிப்பு   ஆலையை  மூட   வேண்டியதாயிற்று  என்றும்    நெகிரி   செம்பிலான்  சுங்கை  புவாவிலிருந்து   வரும்     நீரின்   தூய்மை  கெட்டதற்குக்  கீழறுப்பு  வேலைகளே  காரணம்    என்றும்  பிகேஆர்   தலைமையில்   செயல்படும்   சிலாங்கூர்  அரசு   கூறியது.

ஆனால்,  கீழறுப்பு  வேலைகள்   நடந்திருப்பதாகக்  கூறப்படுவதை   நெகிரி   செம்பிலானின்   பிஎன்   அரசு  மறுக்கிறது.