மலேசியாவுக்கும் சீனாவுக்குமிடையில் வர்த்தக உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் மலேசியாவில் சீன முதலீடு மேலும் விரிவடையும் என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
கடந்த ஆண்டில் சீனா யுஎஸ்$2 பில்லியனை மலேசியாவில் முதலீடு செய்தது என்றும் கடந்த ஐந்தாண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் முதலீடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் நஜிப் தெரிவித்தார்.
“2015-இல் சீனாதான் மலேசியாவின் மிகப் பெரிய வாணிகப் பங்காளி. 2015-இல் இருதரப்பு மொத்த வாணிகத்தின் அளவு யுஎஸ்100 பில்லியன்”, என்றாரவர்.
நஜிப் இன்று பெஜிங்கில் சீனத் தொழில் அதிபர்கள் 30பேரை வட்டமேசை மாநாடு ஒன்றில் சந்தித்தார்.
பிரதமர் ஆறு- நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார். அவர் அங்கிருக்கையில் மலேசிய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்.
மலேசியா சீனர்கள் எதிரிகள் ஆனால் கம்யூனிச சீனர்களை சப்பும் அளவுக்கு நெருக்கம்– இது எப்படி?
பிரதமரின் சீனப் பயணம், பெட்ரோல் விலையேற்றத்தில் போய் முடிந்துள்ளது. இவரின் அடுத்த நாட்டு பயணத்தில் எந்த குண்டை தலையில் தூக்கிப் போடப் போகிறாரோ?