பிரிம் தொகையை அதிகரித்துவிட்டு பெட்ரோல் விலையை உயர்த்தும் கேலிக்கூத்து: குவான் எங் சீற்றம்

guanபெட்ரோல்  விலையில்   15 சென்  உயர்த்தப்பட்டதையும்   சமையல்   எண்ணெய்   உதவித்தொகை   பகுதி   மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதையும்   டிஏபி   தலைமைச்   செயலாளர்   லிம்   குவான்   எங்   கண்டித்தார்.

இது,  கடந்த   வாரம்   2017  பட்ஜெட்டைத்   தாக்கல்   செய்தபோது    பிரிம்  உதவித்   தொகையில்  ரிம200  உயர்த்தப்படும்   எனப்   பிரதமர்   நஜிப்  அப்துல்   அறிவித்ததைக்  “கேலி  செய்வது”போல்   இருக்கிறது   என   லிம்   கூறினார்.

சாமானிய   மலேசியர்கள்  பொருளாதார  இடர்களை    எதிர்நோக்கும்    வேளையில்   பெட்ரோல்   விலை   உயர்த்தப்படுவது  “நியாயமற்ற,  சற்றும்  பரிவற்ற   செயல்”   என்றவர்   சாடினார்.

“வலக்  கையால்   கொடுத்து  விட்டு  கொடுத்ததைவிட   கூடுதலாக   இடக்  கையால்  பறித்துக்  கொள்ளுதல்   என்பதற்கு   இது   நல்ல   எடுத்துக்காட்டு”, என்றாரவர்.

ரோன்95   லிட்டருக்கு    ரிம1.95   ஆகவும்   ரோன்97   லிட்டருக்கு  ரிம2.30  ஆகவும்   டீசல்   லிட்டருக்கு   ரிம2   ஆகவும்   விலை  உயர்ந்திருப்பது   குறித்து   லிம்  கருத்துரைத்தார்.