1எம்டிபி கடன் அரசாங்கக் கடன் அல்ல, நஜிப் கூறுகிறார்

 

mdbdebtnotgovtdet1எம்டிபிக்கு குவிந்துள்ள கடன்கள் அரசாங்கக் கடன்களாகக் கருதப்படவில்லை என்று பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

“1எம்டிபியின் கடன்களும் அவை சார்ந்த செயல்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் கடன்களாக வகைப்படுத்தப்படவில்லை.

“ஆகையால், 1எம்டிபியின் கடன்களும் அவை சம்பந்தப்பட்ட செயல்திட்டங்களும் அரசாங்கத்தின் கடன்களுக்கு முக்கிய கூறுகளாக அமையவில்லை”, என்றார் நிதி அமைச்சருமான நஜிப்.

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோவின் கேள்விக்கி எழுத்த மூலமாக அளித்த பதிலில் நஜிப் இவ்வாறு கூறியுள்ளார்.

1எம்டிபி முற்றிலும் நிதி அமைச்சுக்குச் சொந்தமானதாகும்.

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி 1எம்டிபியில் புத்ராஜெயாவுக்கு ரிம20.31 பில்லியன் பணயம் இருக்கிறது.

ஜூன் 2016 வரையில், அரசாங்கத்தின் கடன் ரிம655.7 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.2 விழுக்காடாகும் என்று விளக்கம் அளித்தார்.

ஜூன் 2015 இல் அரசாங்கத்தின் கடன் ரிம627.7 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54.2 விழுக்காடாக இருந்தது என்றார்.

“மத்திய அரசாங்கத்தின் கடன் சமாளிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. (நாம்) ஒரு மிதமான-கடன்கார நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது”, என்று நஜிப் மேலும் கூறினார்.