நாடாளுமன்ற மக்களவையில் 2017 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின் அமைச்சரவையின் இரகசியங்களை கசிய விட்டார் என்று கூறப்படுவது குறித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீஸ் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினை அழைத்துள்ளது.
போலீசார் தம்மை அழைத்ததாகவும், ஆனால் எப்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்த வாரத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், எப்போது என்பது தெரிவில்லை என்று முகைதின் கூறினார்.
நடாளுமன்ற முகப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த முகைதின் போலீசார் தம்மை அழைத்ததை உறுதிப்படுத்தினார்.
“நான் அழைக்கப்படும் போது, நான் விளக்கமளிப்பேன். இங்கே, நாடாளுமன்றத்தில் இல்லை”, என்றாரவர்.