‘KPDNKK’ என்ற பெயரில் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சின் தோழர்களாக செயல்படும் பொதுமக்களும் கிராம, சமூகத் தலைவர்களும் விலைவாசிமீது எப்போதும் ஒரு கண்வைத்திருக்க வேண்டும் எனத் துணை அமைச்சர் ஹென்ரி சம் ஆகோங் கேட்டுக்கொண்டார்.
“விலைகள் அளவுமீறி உயர்வதைக் கண்காணிக்க ‘KPDNKK நண்பர்கள்’ அரசாங்கத்துக்கு உதவ வேண்டும்.
“பொதுமக்களும் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். பொருள்களின் விலைகளில் பிரச்னை என்றால் அமைச்சின் அமலாக்கப் பிரிவிடம் முறையிடலாம்”, என ஹென்ரி இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது கூறினார்.
அரசாங்கம் எந்த எந்த பொருள்களுக்கு எவ்வளவு மானியம் (உதவித் தொகை) வழங்குகிறது என்பதை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இது எதிர்காலத்தில் மக்களின் பணத்தை சுரண்டப்படுவதிலிருந்து மக்களைக் காப்பாற்ற உதவும். மேலும், மானியம் (உதவித் தொகை) மலேசியர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும். இங்கே இருக்கும் அன்னியர்களும் கள்ளக்குடியேறிகளும் மானியத்தை அனுபவிப்பதை தடுக்க வேண்டும்..