அம்னோ தொடர்புள்ள சிவப்புச் சட்டையினராக இருந்தாலும் சரி, பெர்சேயின் மஞ்சள் சட்டையினராக இருந்தாலும் சரி டட்டாரான் மெர்டேகாவில் பேரணி நடத்த முடியாது என கோலாலும்பூர் மேயர் முகம்மட் நோர்டின் அப்துல் அசிஸ் இன்று அறிவித்துள்ளார்.
இன்று மலேசியாகினியிடம் பேசிய அவர், நவம்பர் 5 சிவப்புச் சட்டை பேரணிக்கும் நவம்பர் 19 பெர்சே பேரணிக்கும் அனுமதி இல்லை என்றார்.
“இரண்டு கடிதங்களையும் (விண்ணப்பங்கள்) இன்று காலை பார்த்தேன்.
“டட்டாரான் மெர்டேகாவில் பேரணிக்கு இடமில்லை. அதனால் அவை நிராகரிக்கப்பட்டன”, என முகம்மட் அமின் கூறினார்.
ஜனநாயக நாட்டில் பேரணிகளை நடத்தமுடியாது. என்னய்யா கத்தரிக்காய் நாடு.
இதுதான் முதலாம் உலகத்தை விட முதலாம் நட்சத்திர நாடு- நாதாரிகளுக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன? இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு ஒரு கேடும் இல்லையே.