ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி நான்கு நெடுஞ்சாலைகள் மட்டுமே அடுத்த ஆண்டு சாலைக் கட்டணத்தை உயர்த்த முடியும் எனப் பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசுப் கூறினார்.
ஈஸ்டர்ன் டிஸ்பர்சல் லிங் (ஈடிஎல்), காஜாங்- சிரம்பான் நெடுஞ்சாலை (லிக்காஸ்), செனாய்- தேசாரூ விரைவுச் சாலை(எஸ்டிஇ), கத்ரி கோரிடோர் விரைவுச் சாலை(ஜிசிஇ) ஆகியவையே அந்நான்குமாகும்.
“சாலைக்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் அந்நான்கு நெடுஞ்சாலைகளுக்கும் ரிம59.77 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்”, என நேற்று மக்களவையில் லிம் குவான் எங்(டிஏபி- பாகான்)கின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் பாடில்லா கூறினார்.