பாஸ் கட்சி, 14வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு எதிராக நேரடிப் போட்டியை உறுதிப்படுத்துவதற்கு மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சுக்குத் தயாராக உள்ளது என அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
ஆனால், ஒரு நிபந்தனை. பாஸின் தாயகத்தில் அதற்கு மற்றவர்கள் தொல்லை கொடுக்கக் கூடாது.
“பாஸ் எப்போதுமே (பேச்சுகளுக்கு) கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. ஆனால், அவர்கள் உள்ளே வந்ததும் தொல்லை கொடுக்கிறார்கள்.
“அதனால், எங்கள் வீட்டில் தொல்லை கொடுக்காதீர்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார். அப்துல் ஹாடி இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இது இன்னும் ஒரு நாடகம். போன முறையே பார்த்தோமே உங்கள் உத்தமங்களை! சந்ததி சாக்குல உங்கள் HUDUD சட்டத்திற்கு எப்படி எல்லாம் நாடகம் ஆடினீர்கள் ? இப்பொழுது கதம் கதம் என்று ஆகிவிடட நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தைகள் வேண்டும் என்கிறீர்கள். இன்னமும் ஒருமுறை எதிர்கட்சிகளிடம் இருந்து பிரிய மாடீர்கள் என்பது என்ன நிச்சயம் ? உங்களுக்கு தேவைபடடால் மீண்டும் குழப்புவீர்கள் . முதலில் BERSIH 5 தார்மீக ஆதரவு தாருங்கள் …… பிறகு எக்கேடாவது கேட்டு தொலையுங்கள் … இனி சீனர்களின் வாக்கு உங்களுக்கு இல்லை …..
தன்னுடைய கப்பலில் ஒட்டை விழுந்து தண்ணி புக ஆரம்பித்தப் பிறகு, கப்பல் மூழ்குவதை தடுக்க ஒரு ‘சம்மதம்’!
இதுவும் அமோனோ நாடகமே . கவலை வேண்டாம்.அடுத்த தேர்தலோடு உங்கள் கட்சி பிரதிநிதிகள் குறைந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.உங்கள் கட்சி மக்களிடத்தில் எடுபடாத காட்சியாகிவிடும்.
இன்னும் எவ்வளவு காலத்திட்க்கு உங்களுடைய ஆட்டம் …..! சீனா சீனா சீனா ……..ஆப்பு ஆப்பு ஆப்பு வெகு தூரத்தில் இல்லை ..?ஓப்போடு
நிபந்தனையை பார்த்தா, உள்ள வீடே மிஞ்சாது போலைருக்குது …