நவம்பர் 19 பெர்சே பேரணியில் மலேசியர்கள் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலிறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிம் பிகேஆர் மூலம் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பில் கூறியுள்ளார்.
“மெர்தேக்கா பிரகடனம் 1957 மற்றும் மலேசிய ஒப்பந்தம் 1963 ஆகியவற்றில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டோம்.
“அந்த நம்பிக்கை மீறப்பட்டுள்ளது. பெர்சேயின் கோரிக்கைகள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளது.
“ஆகவே, நான் அனைத்து மலேசியர்களையும், சகோதரத்துவ எழுச்சிமிக்கநிலையில், நவம்பர் 19 பெர்சே பேரணியில் பங்கேற்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”, என்று அன்வார் அவரது குறிப்பில் கூறியுள்ளார்.
கண்டிப்பாக! ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய எதிர்காலத்தையும், அவர்கள் தம் இனத்தவர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, நியாயமா தேர்தல் நடைபெற அமைதியான அற வழியில் , தங்கள் எதிர்ப்புக்களை காண்பிக்க வேண்டும். காந்தியைப்போல்: நிச்சயமாக, உண்மையாக , அற வழியில் தங்கள் கடமைகளை செய்ய ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வரவேண்டும்.
மலேசிய நாட்டு மக்கள் ஊழலை எதிர்ப்பவர்கள், என வெளியுலகுக்கு பறைசாற்ற வேண்டுமென்றால், பெர்சே பேரணியில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
நாஜிப்பை தொடர்ந்து நாடாள விட்டால் மக்கள் நலிந்து போய்விடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு
விட்டார்கள். பெர்செக்கு 5 திரளும் மக்கள் வெள்ளமே அதற்கு
சான்று பகரும்!!!!
ஓகே பாஸ் நீங்க சொல்லி நாங்க கேட்க்காம இருப்போமா