சீனாவுடன் பிரதமர் நஜிப் ரசாக் செய்துகொண்டுள்ள பல ஒப்பந்தங்கள் மலேசியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக வந்து முடியக்கூடும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் தென்சீனக் கடலில் மலேசியா கோரும் ஒரு நிலப்பரப்பை சீனாவும் கோருவது அடங்கும்.
குறிப்பாக, ஈஸ்ட் கோஸ்ட் ரெயில் லிங்க் (ECRL) ரயில் பாதையை அமைப்பதற்கு சீனாவிடமிருந்து பெறப்படும் ரிம55 பில்லியன் கடன் பற்றி அவர் கவலை தெரிவித்தார்.
“நமக்கு பெரும் கடன் இருக்கிறது. இப்போது ஒரு பெரும் தொகையை ஒரே ஒரு தரப்பிடமிருந்து நாம் பெறப் போகிறோம். அது நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“கடந்த காலத்தில், எந்த நாட்டுடனும் உறவு வைத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருந்தோம்”, என்று கூறிய மகாதிர், எந்த ஒரு நாட்டுடனும் இவ்வளவுப் பெரிய தொகைக்கு கடன் பட்டிருந்தால் இந்த சுதந்திரம் கூட பாதிக்கப்படும் என்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதுவும் தென்சீனக் கடல் தகராற்றில் சீனாவுக்கு தவறான சமிக்கையை அனுப்பியுள்ளது என்றாரவர்.
“இது தென்சீனக் கடல் பற்றி நாம் நமது அணுகுமுறையை மாற்றிக்கொள்வதாகத் தெரிகிறது, அதாவது நாம் நமது கோரிக்கையை கைவிட்டுவிட தயாராகவுள்ளோம்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.
ஈஸ்ட் கோஸ்ட் ரெயில் லிங்க் (ECRL) திட்டத்தை சீனாவுக்கு கொடுத்திருப்பது நாட்டிலிருந்து நிதி வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும். என்று கூறிய அவர், இது நாட்டின் நிதியை நிர்வகிக்கும் விவேகமான வழியாகாது என்றார்.
மலேசியக் கொடி அகற்றப்பட்டுள்ளது
இதனிடையே, முன்னாள் துணைப் பிரதமரும் பெர்சத்து தலைவருமான முகைதின் யாசின் தகராறுக்குட்பட்ட பகுதியிலிருந்து மலேசியாவின் கொடி அகற்றப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டார்.
இது நமது உரிமையை விட்டுக்கொடுப்பதாகும், ஏனென்றால் நமக்கு அந்நிய நாட்டிலிருந்து உதவி தேவைப்படுகிறது என்றாரவர்.
இது வணிகம் பற்றியது மட்டுமல்ல. இது நமது அரசுரிமை பற்றிய விவகாரமும் கூட என்று முகைதின் யாசின் மேலும் கூறினார்.
மலேசியாவின் இறையாண்மை உமது காலத்திலிருந்தே ஒடுக்கியாகி விட்டது. இப்பொழுது இருப்பதோ அமீனோ இறையாண்மைதான்!
இன்னும் சிறிது காலத்தில் சீன நாம் நாட்டை ஆச்சி செய்யலாம் என சீன நண்பர்கள் பேசி கொள்கிறார்கள் .
மலேசியாவின் இறையாண்மையா ? ஹி… ஹ்ஹி… ஹீ…
மகாதீரே ! அன்று அம்னோபுத்ராக்கள் இந்நாட்டு சீனர்களை பார்த்து
CHINA APA LAGI LU MAU ? என்று கேட்டார்கள்.
இன்று அம்னோபுத்ராவின் பிரதமர் சீன பிரதமரை பார்த்து
CHINA APA LAGI LU MAU ? என்று கேட்பது மட்டுமில்லாமல் ஒப்பந்தங்களையும் வாரி வழங்குகிறார்.