மலேசியா ஒருபோதும் சீனாவின் கைப்பாவையாக மாறாது, ஏசிசிசிஐஎம்

terசீனாவுக்குக்  குத்தகைகளைக்  கொடுப்பதால்   மலேசியா  சீனாவின்   கைப்பாவையாக   மாறும்      என்று  கூறப்படுவதை    மலேசிய   சீன  வணிகச்  சமூகம்  மறுக்கிறது.

மலேசியா   பொருளியல்   தடையற்ற   ஒரு  சந்தை   என்பதால்  அன்னிய   முதலீடுகள்   இங்கு   வரவேற்கப்படுகின்றன   என  மலேசிய    சீனர்   வர்த்தக,  தொழில்துறை   சங்கத்  (ஏசிசிசிஐஎம்)   தலைவர்   டெர்   லியோங்   யாப்   கூறினார்.

“இங்கு   நிறைய   திட்டங்கள்    பொது   டெண்டருக்கு   விடப்பட்டுள்ளன.  வெளிநாட்டு  முதலீடுகள்   நாட்டுக்குத்   தேவை.  அதனால்  அவற்றை   நாம்  வரவேற்க   வேண்டும்.  சீனாவை   மட்டுமல்ல     ஜப்பான்,  கொரியா,  தைவான்   முதலிய   நாடுகளையும்  நாம்   வரவேற்கிறோம்”,  என    டெர்  கூறியதாக  சின்  சியு  டெய்லி   அறிவித்துள்ளது.

சீனா   சென்றுள்ள  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   தூதுக்குழுவில்  டெர்ரும்  ஒருவராவார்.

முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்    சீனாவுடன்   பிரதமர்   செய்துகொண்டுள்ள    பல ஒப்பந்தங்கள் மலேசியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக   அமையக்கூடும் என்று    எச்சரித்துள்ளார்.