பெர்சே, கருத்துக்கணிப்புகளைச் செய்யும் மெர்டேகா மையம், இணையச் செய்தித்தளமான மலேசியாகினி ஆகியவை ஓபன் சொசைடி பவுண்டேச(ஓஎஸ்எப்)னிடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் கசிந்துள்ள தகவலை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) விசாரித்து வருகிறது.
இதைத் தெரிவித்த தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், அவ்விவகாரம் தொடர்பில் ஆணையம் பல புகார்களைப் பெற்றிருப்பதாகக் கூறினார்.
“முதலில் விசாரிக்க வேண்டும். விசாரணையின்றி நடவடிக்கை எடுக்க முடியாது. நடைமுறை விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.
“மலேசியச் சட்டங்கள் தெளிவாக உள்ளன. சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றாரவர்.