சீனாவையே அதிகம் சார்ந்திருப்பது நல்லதல்ல: அன்வார் எச்சரிக்கை

anwarபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   சீனப்  பயணத்தை    வரவேற்ற   முன்னாள்   எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்    சீனாவையே   அதிகம்    சார்ந்திருப்பது    நல்லதல்ல   என்றும்   எச்சரித்தார்.

அதற்குப்   பதில்   நஜிப்    பொருளாதாரத்தைச்  சீர்படுத்துவதில்   கவனம்   செலுத்த   வேண்டும்   என்று  பிகேஆரின்   நடப்பில்   தலைவர்   வலியுறுத்தினார்.  பொருளாதாரம்    “சீர்குலைந்து  கிடப்பதாக”க்  குறிப்பிட்ட  ,பட்ஜெட்  2017-க்குப்  பிறகு    பெட்ரோல்,  சமையல்   எண்ணெய்  விலை  உயர்ந்திருப்பதைச்  சுட்டிக்காட்டினார்.

மலேசியா  எண்ணெய்   உற்பத்தி   செய்யும்   நாடு   சமையல்   எண்ணெய்  தயாரிக்கப்   பயன்படும்   செம்பனை   எண்ணெயையும்    அது   உற்பத்தி   செய்கிறது,   என்றாலும்,  இந்நிலை   என்றாரவர்.

இதன்  காரணமாகவே   மலேசியர்கள்   தங்கள்   எதிர்ப்பைக்  காட்டுவதற்காக   நவம்பர்   19  பெர்சே  பேரணியில்   பெருந்  திரளாகக்   கலந்துகொள்ள   வேண்டும்   என்று    தாம்   கேட்டுக்கொண்டதாக    அவர்   சொன்னார்.

“அந்த   (சீன)  வருகை   நல்லதுதான். ஆனால்,  அந்த   ஒரு  நாட்டையே   அதிகம்   சார்ந்திருப்பது    நல்லதல்ல”,  என்றாவர்.