உள்நாட்டு வருமான வரி வாரியம் (ஐஆர்பி) வரி வசூலிக்கும் விசயத்தில் வணிகர்களை விரட்டுவதை விடுத்து பினாங்கில் பிறந்தவரான ஜோ லாவையும் அவரின் குடும்பத்தாரையும் பிடிப்பதற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்.
“வரி வசூலிப்பு குறைந்திருப்பதை ஈடு செய்ய ஐஆர்பி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வருத்தமளிக்கிறது. அதனால் வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
“ஐஆர்பி கடுமையாக நடந்து கொண்டாலும் அது தவறில்லைதான்……..ஆனால், அவர்கள் ஜோ லாவிடமும் அவரின் தந்தை லேரி லாவிடமும் அவரின் குடும்பத்தாரிடமும் இதேபோல் நடந்து கொள்வதில்லையே, ஏன்?
“ஜோ லாவிடம் வரி வசூலிப்பதற்கு ஐஆர்பி ஆர்வம் காட்டாதிருப்பது நியாயமல்ல. அது வரிவசூபிப்பில் இரட்டை நியாயம் பின்பற்றப்படுகிறதோ என்ற சந்தேகத்துக்கு வழிகோலும்”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.