சீரியா செல்லும் வழியில் மலேசியர் இருவர் துருக்கியில் கைது

isசீரியாவில்   இஸ்லாமிய   தீவிரவாதிகளுடன்   சேர்ந்து  கொள்ளத்   திட்டமிட்டிருந்த    இரு  மலேசியர்களை   துருக்கிய   அதிகாரிகள்  கைது   செய்ததாக    மலேசிய   போலீஸ்    அறிவித்தது.

அவ்விருவரும்  ஐஎஸ்-ஸில்   சேர்வதற்காக   ஐஎஸ்  உறுப்பினராகவுள்ள  மலேசியரான   முகம்மட்   வாண்டி   முகம்மட்  ஜெடியால்    பொறுக்கி   எடுக்கப்பட்டவர்கள்  என்று  போலீஸ்   படைத்   தலைவர்   காலிட்   அபு  பக்கார்   கூறினார்.

“முகம்மட்  வாண்டி    அவ்விருவரும்   சீரியா   செல்வதற்கு   ஏற்பாடு   செய்ததுடன்   பயணச்  செலவுகளுக்கும்  உதவினார்”,  என்றாரவர்.

முகம்மட்  வாண்டி   கோலாலும்பூருக்கு  வெளியில்    நடந்த  ஒரு  கையெறிக்குண்டு     தாக்குதலுக்குத்   தானே   பொறுப்பு    என்று  கூறிக்  கொண்டிருக்கிறார்.   அத்துடன்    போலீஸ்  மற்றும்   அரசாங்க    உயர்   அதிகாரிகளைக்  கொல்லப்போவதாகவும்  மிரட்டியுள்ளார்.

கைதான   இருவரும்  தாய்லாந்தின்   பெங்கோக்   சென்று   அங்கிருந்து   இஸ்தான்புல்   பயணமானார்கள்.  அங்கு   அக்டோபர்   28-இல்   துருக்கிய   அதிகாரிகளிடம்   பிடிபட்டனர்.   அங்கிருந்து   நாடு  கடத்தப்பட்டு   மலேசியா  வந்ததும்  மலேசிய   போலீஸ்   அவர்களைக்   கைது   செய்தது.