ஒஎஸ்எப் நிதி: மரினா போலீஸ் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து விட்டார்

 

Maraiquizzedபெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா இன்று புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டு ஒஎஸ்எம் என்ற அமைப்பு அளித்ததாக கூறப்படும் மான்யம் குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டார். கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த விட்ட மாரியா, தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பதில் கூறுவார்.

இதனை மரியாவின் வழக்குரைஞர் பர்ஹானா அப்துல் ஹாலிம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்து வெளியேரிய பின்னர் செய்தியாலர்களிடம் கூறினார்.

மரியா பீனல் கோட் செக்சன் 124C இன் கீழ் விசாரிக்கப்படுகிறார். இச்சட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் சம்பந்தப்பட்டது.

இப்பிரச்சனை குறித்து பெர்சேயிக்கு எதிராக போலீசாரே போலீஸ் புகார் செய்துள்ளனர் என்பதை மரியா வெளிப்படுத்தினார். அப்புகார் மலாய் மெயில் வெளியிட்ட “கசியப்பட்டுள்ள குறிப்பு தேர்தலில் திட்டமிடப்பட்ட அந்நிய தலையீட்டை காட்டுகிறது” என்ற கட்டுரையின் அடிப்படையில் செய்யப்பட்டது என்றும் மரியா கூறினார்.

இன்றைய விசாரணை “வெறும் தொடுத்தல்” என்பதோடு தேவையற்றது ஏனென்றால் பெர்சேயின் கணக்குகள் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளன என்று பர்ஹானா மேலும் கூறினார்.