2010இல் 28.6 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை 2040இல் 41.5 மில்லியனாக உயரும் எனப் புள்ளிவிவரத் துறை கூறியுள்ளது.
பூமிபுத்ராக்களின் எண்ணிக்கைதான் அதிகம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010இல் 67.3 விழுக்காடாக இருந்த அவர்களின் விகிதம் 2040-இல் 72.1 விழுக்காடாக உயரும்.
புள்ளிவிவரத்துறை 2010இலிருந்து 2040 வரைக்குமான மக்கள்தொகை பெருக்கம் மீதான ஒரு கணிப்பைச் செய்து அதை ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
2010இல் 106 ஆண்களுக்கு 100 பெண்கள் என்றிருந்த பாலின விகிதம் 2020 இல் 108 ஆக உயரும். 2040இல் அதில் எந்த மாற்றமும் இராது.
2020ஆம் ஆண்டிலேயே மலேசியாவில் வயதானவர்கள் அதிகம் இருப்பார்கள். அப்போது 65வயதைத் தாண்டியவர்கள் எண்ணிக்கை 7.2 விழுக்காடாக உயரும் என்று அவ்வறிக்கை கூறிற்று.
இதில் 80% மலாய் /பூமி . சீனர் 15% இந்தியர் 5% (தமிழர்-4.2%)
தமிழர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போய்கிறோம் மிகவும் வருத்தமாக உள்ளது
என் தாய் தமிழ்! உங்களது விகிதாச்சாரத்தில் சிறு திருத்தம். 70%,இந்தோனேசிய மலாய்/பூமி, சீனர் 15%, மலேசிய வங்காளதேசிகள் 10%, மலேசிய இந்தியர்கள் 4%, மலேசிய பாகிஸ்தானியர்கள் 1%.
ஐயா சிங்கம் அவர்களே அந்த இந்தியர்களில் தமிழர்கள் விகிதாச்சாரம் – மிகவும் குறைவாக இருக்கும். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு எலும்பு துண்டுக்காக காத்திருக்கும் MIC யை என்ன சொல்வது?
இந்த தகவலை அப்படியே காப்பி அடித்து எழுதும் நண்பன் பத்திரிக்கையை என்ன சொல்வது ? கடந்த சில மாதங்களாக இப்படி காப்பி அடித்து எழுதும் நண்பன் பத்திரிக்கை திருந்த வேண்டும் முதலில்.
இந்தியர்களின் ,குறிப்பாக தமிழனின் மக்கள் தொகை குறைந்தாலும் , MIC தான் காரணமா ! குறை சொல்ல வேறு எவனும் கிடைக்க மாட்டானா !! முதலில் நமது மக்கள் தொகை குறைவதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் ! ஜாதி ! மதம் ! ஏழை ! பணக்காரன் ! இப்படி பல காரணங்களால் பிரிந்து கிடக்கிறோம் ! முதிர் கன்னிகள் ! இளம் விதவைகள் ! வயது கடந்தும் பணம் இன்றி , திருமண பந்தமின்றி பல யுவதிகள் , இளைஜெர்கள் ! ஆடம்பரமாக திருமணம் புரிய வேண்டும் என்ற எண்ணம் ! லைஃப் இஸ் டு என்ஜோய் ! என்று காலம் கடத்தி உள்ளதையும் இழந்து ! உடலையும் சீர் குழைத்து வாழும் முறை !! இப்படி பல காரணங்கள் நமது ஜன தொகையின் வீழ்ச்சி !!
ஐயா மணியம் அவர்களே- MIC யை குறை கூறுவது சரியே- நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே MIC தான். MIC யை நான் 50 களில் இருந்தே கவனித்து வருகிறேன்– அங்கு சொந்த நலனுக்குத்தான் இடம். சொந்த நலன் முக்கியமில்லை என்று நான் கூற மாட்டேன்–ஆனால் நம் இனத்தை பிரதிநிதிக்கிறேன் என்று கூறி நம்மை நம் உரிமைகளை விற்றுவிட்டு இவன்கள் சிலர் மட்டும் உல்லாச புரியில் வாழ்வதும் மற்ற அடிமட்ட தமிழ் மக்கள் வறுமையில் வாடுவது எவ்விதத்தில் நியாயம்.? நம் மக்களுக்கு வழிகாட்டவேண்டும்– மீன் கொடுக்க வேணடாம் இந்தியாவை போல்– மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும்–அது யாருடைய பொறுப்பு? இந்த நாடு அமேரிக்கா அல்ல -அங்கு யார் வேண்டுமானாலும் சட்டத்திற்குள் எது வேண்டுமானாலும் முன்னேற செய்யலாம்– இங்குள்ளது போல் அரசு ஓர் இனத்திற்கு மட்டும் சலுகை கொடுக்காது– ஆனாலும் அங்கும் பலரை தூக்கிவிட சலுகை கொண்டுவரப்பட்டது — இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை. இங்கு சலுகை மூலம் யாருடைய வாங்கி கணக்கு உயர்ந்திருக்கிறது? நான் கூற வேண்டுமா? 1957 ல் இருந்து நாம் எவ்வளவுக்கு முன்னேறி இருக்கிறோம்? மருத்துவர்கள்,பொறியியலாளர்கள் வக்கீல்கள் உயர் நிலையில் எவ்வளவு சதவிகிதம் இந்த நாட்களில்?
பொருளாதாரத்தில் நம் பங்கு எவ்வளவு? நாம் ஓரம் கட்ட பட்டது யாரால்? நான் ஒரு விமான பொறியியலாளன் நான் அந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டேன் ஆனால் நான் யாரை சப்பாதவன் இதன் காரணத்தினால் ஓரம் கட்டப்பட்டேன் கடைசியில் வேளையில் இருந்தே தூக்கப்பட்டேன்– விமான துறையில் கடந்த ஆண்டுகளில் ஏன் இவ்வளவு குழப்படி? தற்போது எல்லாமே மலாய்க்காரன் மயம்– திறமை உள்ள யாருக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும் – தர்க்குறிகளுக்கு அரைவேக்காடுகளுக்கு சிறந்த இடமாக மலேஷியா முன்னேறி விட்டது.
தமிழனின் மக்கள் தொகை குறைந்தா என்ன குடியா மூழ்கி விட போகிறது.
அதுதான் சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!! என்று அமைக்க போகிறார்களாமே.
பிறந்த மண்ணில் வாழ வழி தெரியாமல் வெளிநாட்டுக்கு ஓட்டுவது நமக்கு ஒன்றும் புதிதல்லவே. தனி தமிழர் நாட்டுக்கு ஓடி விடுவோம். யாராயினும் கேட்டால் திரை கடல் ஓடியும் திரவியம் தேடுகிறோம் என்போம். இன்னும் எத்தனை வருடத்திற்கு வாழ வந்த நாட்டில் வந்தேறிகளாய் வாழ்வது.