பினாங்கு டிஎபி மாநாட்டில் ஒரு பேராளர் முன்னாள் பிரதமர் மகாதிரை ஒரு பாம்புக்கும் ஒரு பரத்தமைத் தரகருக்கும் ஒப்புடையதாகக் கூறினார்.
ஆனால், பின்னர் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டதற்குகிணங்க அவர் கூறியதை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
ஒரு முன்னாள் பிரதமரை பாம்பு என்றும் பரத்தமைத் தரகர் என்றும் கூறுவது நற்பண்பு அல்ல என்று குவான் எங் கூறினார்.
பின்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சம்செர் சிங் திண்ட் என்ற அப்பேராளர் தாம் லிம் மீது கொண்டுள்ள மரியாதையின் நிமித்தம் ‘பாம்பு” மற்றும் “பரத்தமைத் தரகர்” என்ற சொற்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக கூறினார்.
ஆனால், மகாதிருடனும் அவரது கட்சியுடனும் ஒத்துழைப்பு இருக்கக்கூடாது என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றாரவர்.
மேலும், பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதின் யாசினுடனான ஒத்துழைப்பதையும் சம்செர் சிங் கண்டித்தார்.
முகைதின் யாசின் கல்வி அமைச்சில் இருந்த போது இன்டர்லோக் நாவலை தற்காத்தார். அந்நாவலில் “பறையா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சம்செர் சிங் தெரிவித்தார்.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மை உண்மைதான்
மனந்திறந்து துணிச்சலோடு உண்மையை வெளிப்படுத்திய அந்த பேராளர் போற்றுதலுக்குரியவர். லிம் குவான் எங் சோரம் போகக் கூடியவர்.