பிபிசி: கோல்ப் தோழர் நஜிப் தமது “பிரியமான பிஎம்” என்று டிரம்ப் வர்ணித்துள்:ளார்

 

Trumps'golfingbuddyமலேசியப் பிரதமர் நஜிப் கோல்ப் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் விருப்பம் அவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டாளியைப் பெற்றுத்தந்துள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்துதெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் மலேசியத் தலைவரின் “கோல்ப் விளையாட்டு தோழர்” என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நஜிப்பும் டிரம்ப்பும் இருக்கும் ஒரு கையொப்பமிட்ட நிழற்படம் நஜிப்பின் மேசைமீது இருப்பதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

அப்படத்தில் டிரம்ப் “எனது பிரியத்துக்குரிய பிஎம்முக்கு” என்று பொறித்துள்ளார் என்று பிபிசி அதன் அதிபர் தேர்தல் பற்றிய நேரடி செய்தி ஒலிபரப்பில் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாவுடன் ஹவாயில் நஜிப் கோல்ப் விளையாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கேட்கப்பட்டதற்கு தமக்கும் டிரம்ப்புக்கும் தனிப்பட்ட உறவுமுறை இருப்பதாக நஜிப் தெரிவித்தார்.

“எனக்கு அவரை தனிப்பட்டமுறையில் தெரியும். அவர் எனக்கு முன்பின் தெரியாதவரல்ல”, என்று நஜிப் செய்தியாலர்களிடம் கூறினார்.