சிட்னியில் அருளின் உணவுக்கான செலவை மட்டுமே அரசாங்கம் ஏற்றது

jailanai1எம்டிபி   தலைவர்   அருள்  கண்ட  கந்தசாமி    ஆஸ்திரேலியாவின்  சிட்னிக்கு  ஒரு   நிகழ்வில்  கலந்துகொள்ளச்    சென்றபோது     அவரின்   உணவுக்கான   செலவை  மட்டுமே   தான்   ஏற்றதாக    தொடர்பு,  பல்லூடக  அமைச்சு   கூறியது.

நியூ  சவுத்   வேல்ஸ்   பல்கலைக்கழகத்தில்    நடத்தப்பட்ட    1எம்டிபி   நிகழ்வில்   கலந்து  கொள்வதற்காக     அருள்  சென்றார்    என்பதால்    அவரின்   பயணச்  செலவை   அரசாங்கம்  ஏற்க  வேண்டிய    “அவசியம்  எழவில்லை” துணை   அமைச்சர்   ஜைலானி  ஜொகாரி   கூறினார்.

“அருள்  கந்தா   தனிப்பட்ட  முறையில்தான்   சென்றார்.  அதனால்   அவரின்  பயணச்  செலவு      எங்கள்   பொறுப்பல்ல.   உணவும்   பானங்களும்   மட்டும்தான்  எங்கள்  செலவு”,  என  ஜைலானி   நாடாளுமன்றத்தில்    அந்தோனி  லோக்கின் (டிஏபி-  சிரம்பான்)   கேள்விக்குப்  பதிலளித்தபோது   ஜைலானி   கூறினார்.