பிலிப்பீன்ஸ் அரசாங்கம், சாபா கடலில் கடத்தல்காரர்களை விரட்டிச் செல்லும் மலேசிய சட்ட அமலாக்கப் பிரிவினர் தனது எல்லைக்குள் நுழைவதற்கு அதிகாரம் வழங்கியிருப்பது அவர்களின் நடவடிக்கைகளைச் சுலபமாக்கும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேயின் முடிவை வரவேற்ற அஹ்மட் ஜஹிட், அது பயங்கரவாதிகள் பிணைப்பணத்துக்காக ஆள்களைக் கடத்திவிட்டு தென் பிலிப்பீன்சுக்குத் தப்பியோடும் சம்பவங்களுக்கு முடிவுகட்ட வழிகோலும் என்றார்.
ஆள் கடத்தலுக்கு முடிவு காட்டுகிறார்களோ இல்லையோ, மலேசிய சட்ட அமலாக்க பிரிவினருக்கு தங்களது பங்கு பணத்தை நேரடியாக கடத்தல்காரர்களிடம் பேரம் பேச உதவும்.