அரசாங்கத் தொடர்புள்ள ஒரு நிறுவன(ஜிஎல்சி)த்தின் பொது மேலாளரையும் இதர இருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எமஏசிசி) விசாரணைக்காக ஐந்து நாள்களுக்குத் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த 52வயது மேலாளர் புத்ரா ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கும் ஒரு நிறுவனத்தின் ஆலோசகர் என்றறியப்படுகிறது.
நேற்று காலை சிரம்பானில் அவரது வீட்டில் அதிரடிச் சோதனைகள் நடத்திய எம்ஏசிசி அதிகாரிகள் ரிம30,000 ரொக்கத்தை அவரது காரிலிருந்து கைப்பற்றினார்கள். இரண்டு ஆவ்டி கார்கள், ஒரு ஹிலக்ஸ், ஒரு ஹார்லி டேவிட்சன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர், குறித்த காலத்தில் திட்டத்தை முடித்துக் கொடுக்கத் தவறிய குத்தகையாளர்களிடமிருந்து கையூட்டு பெற்றாராம்.
திட்டங்களைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதற்காக அவருக்குக் கையூட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தடுத்து வைக்கப்பட்ட மற்ற இருவரும் கட்டுமான நிறுவனங்களின் அதிகாரிகள். ஒருவர் தலைமை செயல் அதிகாரி, மற்றொருவர் பொது மேலாளர். கையூட்டு கொடுத்ததற்காக அவ்விருவரும் விசாரிக்கப்படுவார்கள்.
எல்லாம் வெறும் கண்துடைப்பு
எல்லாம் வெறும் கண் துடைப்பு