முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித் தலைவர் கையருடின் அபு ஹசான், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் அப்துல்லாவுக்கு எதிராக தாம் செய்த புகாரின்மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் அவசரம் காட்டாதது ஏன் என்று வினவினார்.
இதற்கு முற்றிலும் மாறாக, அக்டோபர் 27-இல் ஒரு என்ஜிஓ-வான ஜாரிங்கான் மலாயு மலேசியா முன்னாள் அமைச்சர்கள் முகைதின் யாசின், ஷாபி அப்டால், அஹ்மட் ஹுஸ்னி அப்துல்லா ஆகியோருக்கு எதிராக ஒரு புகார் செய்தபோது மட்டும் போலீஸ் விரைவாக செயல்பட்டது என்றாரவர்.
“புகார் செய்த அடுத்த நாளே விரைந்து செயல்பட்ட ஐஜிபி(காலிட் அபு பக்கார்) போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
“ஆனால், நான் அவைத் தலைவருக்கு எதிராக புகார்மீது அந்த வேகம் இல்லை. ஆறு நாள்கள் ஆகி விட்டன. அவைத் தலைவரை விசாரிப்பதாக போலீஸ் இதுவரை அறிவிக்கவில்லை”, என்றார்.
போலீஸ் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அம்மூன்று அமைச்சர்களையும் மிரட்டினார் என அவைத் தலைவர் பண்டிகாருக்கு எதிராக கையருடின் புகார் செய்துள்ளார்.
2017 பட்ஜெட் விவாதத்தின்போது இரகசியத்தைப் பாதுகாப்பதாக அமைச்சரவைக்கு செய்து கொடுத்த உறுதிமொழியை முகைதின், ஷாபி, அஹ்மட் ஹுஸ்னி ஆகிய மூவரும் மீறியிருக்கலாம் என்று பண்டிகார் குறிப்பிட்டதைத்தான் கையருடின் மிரட்டல் என்கிறார்.
“ஒரு மலேசியனான நான், பண்டிகார் அவ்வாறு கூறியதை ஒரு வகை மிரட்டலாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அவர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சுறுத்தலாகவும் கருதுகிறேன்”, என்றாரவர்.
ஹாஹாஹா ! டேய்–உனக்கு தெரியாதாடா? நீயும் அதே குட்டையில் தானே மீன் பிடித்தாய்– உனக்கு இன்னுமா தெரிய வில்லை? நடிப்பு பிரமாதம்.