மாணவர் கூட்டமைப்பான கெசத்துவான் மஹாசிஸ்வா மலேசியா(கேஎம்எம்)வைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் கோம்பாக்கில் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
யுனிவர்சிடி மலேசியா சாபா லாபுவான் அனைத்துலக வளாக மாணவரான அஷ்ரப் நஸ்ரின் அஸ்மான், கேஎம்எம்னின் பெர்சே 5 விளக்கமளிப்புக் கூட்டத்தில் முதல் பேச்சாளராக பேசவிருந்தார்.
கேஎம்எம் தலைவர் அனிஸ் ஷியாபிக் முகம்மட் யூசுப்பைத் தொடர்புகொண்டு பேசியபோது கைது சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர் அஷ்ரப் கோம்பாக் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இன்று பிற்பகல் கூட்டத்துக்குத் அவர்கள் வந்த போது அவர்களுக்கு முன்பே போலீசார் அங்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்ததாக அனிஸ் ஷியாபிக் கூறினார்.