சுவிஸ் வங்கி பிஎஸ்ஐ (BSI) முன்னாள் நிர்வாக இயக்குநர் யாக் இயு சீ நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். இன்று, அவருக்கு 18 வார சிறை தண்டனையும் S$24,000 அபராதமும் வித்திக்கப்பட்டது.
யாக், வணிகர் லோ தேக் ஜோவுக்கு வங்கியின் உறவுமுறை நிர்வாகியாக இருந்தவர், பொய்க் கையெழுத்திடல் மற்றும் 1எம்டிபி சம்பந்தப்பட விசாரனையில் சந்தேகத்திற்குரிய வணிக நடவடிக்கைகளைத் தெரியப்படுத்தாமல் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இவர் பிஎஸ்ஐ வங்கியில் 1எம்டிபி வங்கிக் கணக்கிற்கும் பொறுப்பாளராக இருந்தவர்.
கடந்த அக்டோபரில் சிங்கப்பூர் மேற்கொண்ட 1எம்டிபி சம்பந்தப்பட்ட விசாரணையின் போது யாக்கிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.