பாஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சாத்தியம் என்று பெர்சத்து நம்புகிறது

 

muhyddinmouwithpasபெர்சத்து மற்றும் பாஸ் கட்சி ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று பெர்சத்துவின் தற்போதைய தலைவர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார்.

பெர்சத்துவின் பக்கத்தான் ஹரப்பானுடனான ஒப்பந்தமும் பாஸ் கட்சியுடனான ஒப்பந்தமும் ஒன்றாகச் செய்யப்படுமா என்று முகைதின் யாசினிடம் இன்று கேட்கப்பட்டது.

ஒரு புதிய கட்சி என்ற முறையில், பெர்சத்து அனைத்து கட்சிகளிடமும் நாட்டம் கொண்டுள்ளது.

பாஸ் கட்சி தங்களுடன் பேச விருப்பம் தெரிவித்துள்ளது, குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் நேரடிப் போட்டிக்கு வகைசெய்வது போன்ற ஒரு விரிவான ஒப்பந்தம் செய்துகொள்வது பற்றியதாகும்.

“அது நன்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய முதல் கூட்டம் நடந்தது. அடுத்து நாம் எப்போது மீண்டும் அமர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற ஒன்றை செய்துகொள்ளலாம் என்பதற்கான அறி குறிக்காக   காத்திருக்கிறோம்”, என்று முகைதின் இன்று பக்கத்தான் ஹரப்பான் மாநாடு முடிவுற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்சத்து, பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதால்தான் இன்று பக்கத்தான் ஹரப்பானுடன் பெர்சத்து கையொப்பமிடவிருந்த ஒப்பந்தம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பதை முகைதின் மறுத்தார்.