ஜமாலுக்காக டிஏபி பிரதிநிதி மன்னிப்பு கேட்டார்

dapடிஏபியின்     செகிஞ்சான்   சட்டமன்ற   உறுப்பினர்   இங்   சுவி   லிம்,    சிவப்புச்  சட்டை   இயக்கத்   தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுசும்   தம்   வட்டாரத்தைச்  சேர்ந்தவராக   இருப்பதற்காக   மன்னிப்பு   கேட்டுக்கொண்டார்.

“சிவப்புச்     சட்டைத்     தலைவர்   சுங்கை   புசார்    அம்னோ   தொகுதித்    தலைவர்    ஜமாலும்    செகிஞ்சானைச்   சேர்ந்தவர்தான்    என்பதற்காக    உங்களிடம்   மன்னிப்பு    கேட்டுக்கொள்கிறேன்.

“அப்படி   ஒருவர்   என்   வட்டாரத்தில்    இருப்பது   ஏன்  என்று    தெரியவில்லை. (என்னுடைய   வட்டாரத்தில்)  அப்படி  ஒருவர்  இருப்பதற்காக   வெட்கப்படுகிறேன்”,  என  நேற்றிரவு   பண்டார்    துன்  உசேன்  ஒன்னில்   ஒரு   செராமாவில்    பேசியபோது    குறிப்பிட்டார்.

நேற்று,  ஜமாலும்   அவரின்   கூட்டத்தாரும்     டட்டாரான்   மே  பேங்கில்  ஒன்று    கூடினர்.  டட்டாரான்    மே   பேங்,  வரும்   சனிக்கிழமை     நடைபெறவுள்ள   பெர்சே  5  பேரணியில்   கலந்துகொள்வோர்    ஒன்றுதிரளும்   இடங்களில்   ஒன்றாகும்    என்பது   குறிப்பிடத்தக்கது.

அக்கூட்டத்தில்   பேசிய   ஜமால்,  பெர்சே   பேரணியைத்   தடுக்கப்  போவதாக  இதுவரை    தான்   கூறி  வந்தது   வெறும்  பேச்சல்ல   என்று  வலியுறுத்தினார்.   பேரணி    நாளில்  பெர்சே   ஆள்கள்   பேரணியில்    கலந்துகொள்வதற்காக    எங்கெல்லாம்  ஒன்றுதிரள்கிறார்களோ    அங்கெல்லாம்   சிவப்புச்   சட்டையினரும்  திரள்வார்கள்   என்றாரவர்.

பேரணி  குறித்த  விழிப்புணர்வை    ஏற்படுத்துவதற்காக   பெர்சே  வாகனத்   தொகுதிகள்   நாடெங்கும்   சென்றபோது    சிவப்புச்   சட்டையினரும்  கூடவே   சென்று   அவற்றுக்குத்   தொல்லை   கொடுத்து   வந்துள்ளனர்.