பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம் ஆனால், அதனால் கட்சி பலவீனமடைந்து விடாது என்கிறார் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி.
மாறாக, நீதிமன்றத் தீர்ப்பு பிகேஆரின் வலிமையை அதிகரித்து அதன் ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் என சிலாங்கூர் மந்திரி புசார் குறிப்பிட்டார்.
ரபிசி தீர்ப்பைத் தள்ளுபடி செய்வதில் வெற்றி கண்டு பிகேஆரின் அடுத்த பொதுத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த விரைவில் திரும்பி வருவார் என்றும் அஸ்மின் நம்புகிறார்.
“நிச்சயமாக, அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்”, என நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தபோது அஸ்மின் கூறினார்.