ஜமால்: ‘போலீஸ் அடித்தார்கள்’ என்று நான் சொன்னதுபோல் தெரிகிறது; ஆனால், நான் அப்படிச் சொல்லவில்லை

jamalசுங்கை  புசார்   அம்னோ   தலைவர்    ஜமால்   முகம்மட்  யூனுஸ்,  நேற்று    அம்பாங்கில்   பெர்சே-எதிர்ப்பு    நடவடிக்கையின்போது   போலீசார்     தன்னைத்   தாக்கினார்கள்   என்று   தான்  சொல்லவே   இல்லை   என்று  மறுக்கிறார்.

நேற்று   போலீசாருடன்   தள்ளுமுள்ளு     ஏற்பட்டபோது  “Polis tumbuk saya (போலீஸ்  தாக்கி விட்டது)”  என்று  ஜமால்  உரத்த  குரலில்  சத்தமிடுவது   கேட்டது.

இன்று  ஊடகங்களிடம்   பேசிய    ஜமால்,   நேற்றைய   சம்பவத்தில்    தான்   அப்படிச்  சொல்லவே   இல்லை   என்றும்   தன்னைத்   தாக்கியவர்கள்    பிகேஆர்   ஆதரவாளர்கள்    என்றும்   சொன்னார்.

“போலீஸ்  என்னைத்   தாக்கியதாக  சொல்லவில்லை.  நான்  தாக்கப்பட்டதை   போலீசிடம்   சொல்ல  விரும்பினேன்,  அவ்வளவுதான்.

“அங்கிருந்த  குழப்ப   நிலையில்     போலீஸ்  என்னைத்  தாக்கிவிட்டதாக  நான்   சொன்னதுபோல்   தோன்றியது  போலும்.

“என்னைத்   தாக்கியவர்கள்   அந்த  haram jadah (முறையான பெற்றோர்க்குப் பிறவாதவ)  கூட்டம்தான்”  என்று  ஜமால்   இன்று  பாண்டான்  இண்டா   போலீஸ்  நிலையத்துக்கு   வெளியில்   தெரிவித்தார்.

அச்சம்பவம் ,   நேற்று  அம்பாங்   எம்பி   சுரைடா   கமருடினும்    பிகேஆர்   ஆதரவாளர்களும்   நவம்பர்   19   பெர்சே   பேரணி  பற்றிய   துண்டறிக்கைகளை   விநியோகித்துக்   கொண்டிருந்தபோது   ஜமாலும்   அவரின்   சிவப்புச்   சட்டையினரும்   இடையில்  புகுந்து   தொல்லை  கொடுக்க  முனைந்தபோது   நிகழ்ந்தது.

சிவப்புச்   சட்டையினர்   பெர்சே   ஆதரவாளர்களை   நோக்கிச்   செல்ல  முறபட்டபோது   போலீஸ்   அவர்களைத்   தடுத்தது.  அப்போது   ஏற்பட்ட   தள்ளுமுள்ளுவில்   ஜமால்   முகத்தில்   குத்துப்பட்டதாகக்  கூறப்படுகிறது.