நாடாளுமன்ற சட்டவிலக்கை வலுப்படுத்த அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்: பிஎன் எம்பி பரிந்துரை

parlபிஎன்  நாடாளுமன்ற   உறுப்பினர்   ஒருவர்,   அரசமைப்பில்   திருத்தம்   செய்து    நாடாளுமன்ற   உறுப்பினர்களுக்குள்ள   சட்டவிலக்கை   வலுப்படுத்தலாம்   என  முன்மொழிந்தார்.  அரசமைப்பில்   அப்படி   ஒரு   திருத்தம்   கொண்டுவர      நாடாளுமன்றத்தில்    எதிரணியினரின்   ஒத்துழைப்பு   தேவைப்படும்.

நாடாளுமன்ற   சட்டவிலக்கு   என்பது   தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்   மேற்கொள்ளப்படும்   விசாரணைகள்   தவிர்த்து    மற்ற   வகை   விசாரணைகளிலிருந்து  எம்பிகளைப்   பாதுகாப்பதாக   இருத்தல்   வேண்டும்   என்று  ச்சே   முகம்மட்  சுல்கிப்ளி  ஜூசோ(பிஎன் -சித்யு)   கூறினார்.

அரசமைப்பு   போலீஸ்   விசாரணை   குறித்து    எதுவும்   கூறவில்லை.

“எனவே   அரசமைப்பில்   திருத்தம்    செய்வோம்……..எப்போதும்   வாக்குவாதம்   செய்து  கொண்டிருப்பதை   விட   அது   நல்லது”,  என     ச்சே  முகம்மட்   இன்று    நாடாளுமன்றத்தில்   கூறினார்.