பார்டி அமனா மலேசியா, வரும் சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் பெர்சே 5 பேரணிக்கு 50,000 உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டி வருவதாக உறுதியளித்துள்ளது.
அத்துடன் அக்கட்சி 55 வழக்குரைஞர்களையும் 50 மருத்துவர்களையும் 30 செய்தியாளர்களையும் 20 படப்பிடிப்பாளர்களையும் ஏற்பாடு செய்திருப்பதாக அமனா தலைமைச் செயலாளர் முகம்மட் அனுவார் தாகிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எங்கள் தலைமையகத்தில் அமனாவின் பெர்சே 5 மையமும் செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றாரவர்.
அவருடன் இருந்த வழக்குரைஞர் வான் அன்வார் வான் இப்ராகிம், அமனாவின் வழக்குரைஞர் குழு பெர்சே பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் கட்சி வேறுபாடு பாராது தேவையான உதவிகளைச் செய்யும் என்றார்.
பேரணி சுமுகமாக நடப்பதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமனா சட்டப் பிரிவு உதவித் தலைவரான வான் அன்வார் கேட்டுக்கொண்டார்.
மகிழ்ச்சித் தரும் அருமையான செய்தி!