இந்திரா வழக்கு: ரிதுவான் நாட்டில்தான் இருப்பதாகவே அவரின் வழக்குரைஞர்கள் நம்புகிறார்கள்

indiraகே.பத்மநாதன்   @  முகம்மட்  ரிதுவான்   அப்துல்லா   அவரின்  ஆக  இளைய   மகள்  பிரசன்னா   திக்‌ஷாவை  இன்று   நீதிமன்றம்   அழைத்து  வராமல்  நீதிமன்றத்தை    அவமதித்தார்   என்பது   ஒரு  புறமிருக்க,  அவர்      இன்று   கூட்டரசு   நீதிமன்ற   வழக்கிலும்  முன்னிலை   ஆகவில்லை.   ஆனாலும்,  அவர்   மலேசியாவில்தான்   இருப்பதாக    அவரின்    வழக்குரைஞர்கள்   நம்புகிறார்கள்.

“நேற்று  ரிதுவானைத்   தொடர்புகொள்ள  முயன்றேன்  முடியவில்லை.  மூன்றாம்   தரப்புகள்  மூலமாகவும்   தொடர்புகொள்ள  முயன்றேன்.  அவர்  கிடைக்கவில்லை”,  என  அவரின்  வழக்குரைஞர்   ஹதெம்  மூசா   கூறினார்.

“அவர்   இன்னும்  நாட்டில்  இருப்பதாகவே   நம்புகிறேன்”,  என்றாரவர்.

அவர்  சொன்னதை   ரிதுவானின்  முன்னாள்  மனைவி   எம்.இந்திரா  காந்தியும்   ஒப்புக்கொண்டார்.   ரிதுவானுக்குத்   தன்னைக்    காண்பித்துக்   கொள்ளும்  துணிச்சல்  இருக்கிறதா    என்றவர்   சவால்  விடுத்தார்.

ரிதுவான்  அவருடைய  பழைய   தொலைபேசி   எண்ணிலிருந்து   தன்   மற்ற  இரண்டு  பிள்ளைகளைத்   தொடர்பு   கொண்டதாகவும்   அந்தப்  பாலர்  பள்ளி   ஆசிரியர்    தெரிவித்தார்.

“கோழையாக   இருக்காதீர்கள்.  பிள்ளைகளைச்   சந்திப்பதற்கு   உங்களுக்குள்ள  உரிமையை    நான்  மறுக்க   மாட்டேன்.
“என்  மகளை   மட்டும்   அழைத்து   வாருங்கள்”,  என்று    வழக்கு  முடிந்து   ஊடகங்களிடம்   பேசியபோது   இந்திரா   கூறினார்.

இந்திரா  காந்தி  ஆகக்  கடைசியாக   பிரசன்னாவைப்   பார்த்தது    2010-இல்.