1 நிமிடம் 37 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் பெர்சே கூட்டமைப்பை விளம்பரப்படுத்த வந்தவர்போல் பெர்சே 5 டி-சட்டையில் காட்சி அளித்தார்.
வரும் சனிக்கிழமை பெர்சே 5 பேரணியில் மலேசியர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“மலேசியா கடும் இடர்ப்பாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. (பிரதமர்) நஜிப் நிர்வாகத்தின் காரணமாக நாடு, திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் கடன் பட்டுள்ளது.
“எனவே, நாம் அரசாங்கத்தின்மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த டட்டாரான் மெர்டேகாவிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்”, என்றாரவர்.
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் ; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பதற்கு நீங்களே ஒரு உதாரணமாக திகழ்கிறீர்கள் மாமா மகாதீரே.
உங்கள் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிப்பு தீவிரமாக நடந்தது.இன்றுவரை தொடர்கதையாக உள்ளது.உங்கள் இனம் தமிழர்களை இளித்து பேசுவது,வேலை வாய்ப்புகளை புறக்கணிப்பது,நான்காம் பிரஜையாக நடத்துவது,பகைமை உணர்வுடன் நடந்துகொள்வது அனைத்தும் உங்கள் காலத்தில் உருவானது இன்றும் தொடர்கிறது.இன்று வரை தீர்வு இல்லை.
ஆயிரம் சொன்னாலும் உங்கள் அறிவுரை காலம் கடந்த ஒன்று.உங்கள் இனத்தின் செயல்பாடு அனற்கு சான்று.
MELAYU MUDAH LUPA என்பதை மகாதீர் காலம் கடந்துதான் உணர்ந்திருக்கிறார்.
இவனின் ஆட்சி காலத்தில் பெருந்தன்மையோடு இன நல்லிணக்கத்தை வளர்த்திருந்தானேயானால் இந்த நாடு இன்று இவ்வளவு மோசமான நிலைக்கு வந்திருக்காது– பிடிக்கிறதோ இல்லையோ சீனர்களின் திறமையை நாம் ஏற்று கொள்ள தான் வேண்டும். ஆனாலும் நல்ல சீனர்களை (குறை கூறும்) எதிரிகளாகவே பார்த்தால் நல்லது நடக்காது– இந்தோனேசியா ஒரு உதாரணம்– இந்தோனேசியாயாவில் இல்லாத இயற்க்கை வளங்களா? ஊழல் அரைவேக்காடு ஆட்சி– ஆனால் வறட்டு கௌரத்திற்கு மட்டும் குறை வில்லை.