‘சட்டவிரோத பேரணி’யில் கலந்துகொண்டால் தண்டனை: மொனாஷ் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை

monashமொனாஷ்  பல்கலைக்கழக   மாணவர்கள்   சட்ட  விரோத   பேரணிகளில்   கலந்து  கொண்டால்   கட்டொழுங்கு   நடவடிக்கையை   எதிர்கொள்ள   நேரும்   என  அப்பல்கலைக்கழகம்    எச்சரித்துள்ளது.

இந்த   மின்னஞ்சல்    எச்சரிக்கையைப்  பல்கலைக்கழகப்  பதிவாளர்   சுசிலா   நாயர்,   நேற்று      மாணவர்களுக்கு   அனுப்பியிருந்தார்.

“மலேசிய   சட்டங்களை   மீறும்   சட்டவிரோத   ஒன்றுகூடலில்/ அது  தொடர்பான   நடவடிக்கையில்   ஈடுபட   வேண்டாம்   என்று   அறிவுறுத்தப்படுகிறது.

“அப்படிப்பட்ட   ஒன்றுகூடலில்/ அது  தொடர்பான   நடவடிக்கையில்   ஈடுபடும்  மாணவர்கள்    அல்லது   அதற்காகக்  கைதாகும்   மாணவர்கள்மீது   ஒழுங்கு   நடவடிக்கை    எடுக்கப்படும்”,  என  அந்த  மின்னஞ்சலில்   கூறப்பட்டிருந்தது.