சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5 பேரணியில் வேட்கையால் உந்தப்பட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு உத்தரவாத்ம் அளிக்க முடியாது என்று சிகப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் இன்று கோலாலம்பூர் பிடபுள்யுடிசிக்கு வெளியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பெர்சே 5 பேரணி அமைதியாக நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். பெர்சே 5 பேரணிக்கு எதிரான அவரது பேரணி அமைதியானதாக இருக்குமா என்று கேட்டதற்கு இவ்வாறு கூறினார்.
பெர்சே ஆதரவாளர்கள் கூடுவதை, பேசுவதை, பொய்யுரைப்பதை மற்றும் இறுதியாக அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதைத் தடுத்து நிறுத்தும் அவரது இயக்கத்தின் செயல் திட்டம் பின்பற்றப்படும் என்று சுங்கை பெசார் அம்னோ தொகுதியின் தலைவரான ஜமால் வலியுறுத்தினார்.
தம்மைப் பொறுத்தவரையில், டிஎபி தலைவர்களான லிம் கிட் சியாங், லிம் குவான் எங் மற்றும் டோனி புவா போன்றவர்களையும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டையும் அன்றைய தினத்தில் எதிர்கொள்ளும் நம்பிக்கை கொண்டிருப்பாதாக ஜமால் கூறினார்.
மகாதிருடன் கைகுலுக்க நேர்ந்தால் தாம் அவருக்கு அளித்த “வாக்குறுதி”யை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று கூறிய ஜமால், அது குறித்து மேற்கொண்டு எதுவும் கூறவில்லை.
கடந்த மாதம், காப்பாரில் பெர்சேயிக்கு எதிரான பேரணியில் பேசிய ஜமால், தாம் மகாதிரை முன்பு சந்தித்த போது அவரது கையைக் குலுக்கி முத்தமிட்டதாகவும், ஆனால் இப்போது சந்தித்தால் அவரது கையில் துப்புவேன் என்று கூறியிருந்தார்.
வரும் சனிக்கிழமைக்கு அவரது திட்டவட்டமான நடவடிக்கை என்ன என்று கேட்டதற்கு பெர்சே ஆதரவாளர்கள் கூடும் இடங்களில் எல்லாம் சிகப்புச் சட்டையினர் இருப்பார்கள் என்பதை அவர் மீண்டும் கூறினார்.
அதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றாரவர்.
அவரின் ஆதரவாளர்கள் 300,000 பேர்களை இப்பேரணியில் கலந்துகொள்ள திரட்டப்பட்டிருப்பதாக ஜமால் கூறிக்கொண்டார்.
“மஞ்சள் சட்டையினர் தொடங்கும்போது சிகப்புச் சட்டையினர் தொடங்குவர். அவர்கள் நிறுத்தியதும் நாங்கள் நிறுத்துவோம்”, என்றாரவர்.
கைது நடவடிக்கைகள் ஏற்படுமானால், அவற்றை கையாள்வதற்கு சட்ட உதவி வழங்க 38 வழக்குரைஞர்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது ஆதரவாளர்கள் பல்லினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பெர்சேயிக்கு எதிராக ஒன்றிணைந்த சக்தியைக் காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.

























அழிவுக்கு அல்லாஹ்விடம் வேண்டுதலா ? எப்படியோ சிவப்பு சட்டையினர் அழிந்தால் நாட்டுக்கு நல்லது.
இவன் என்ன பெரிய vip ? எல்லாம் அம்னோ கபட நாடகம்