பேரணிகளுக்கிடையில் மோதலைத் தவிர்க்க சட்டமுண்டு: போலீசுக்கு நினைவுறுத்து

berபெர்சேயும்   சிவப்புச்   சட்டையினரும்   ஏக   காலத்தில்   பேரணி   நடத்துவதைத்   தடுக்க   சட்டத்தில்   இடமுண்டு    என்று   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்குக்கும்   போலீசுக்கும்   நினைவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்  பேரணியால்     சச்சரவு   மூளுமென்று   நினைத்தால்  அதை  வேறொரு  நாளில்  அல்லது   வேறொரு   இடத்தில்   நடத்துமாறு    சம்பந்தப்பட்ட   போலீஸ்   மாவட்டத்தின்      பொறுப்பதிகாரி   உத்தரவிடலாம்   என   2012  அமைதிப்  பேரணிச்   சட்டம்  பகுதி   18   கூறுகிறது.

அப்படி   ஒரு   சட்டம்   இல்லாததுபோல்   அதிகாரிகள்    “பாசாங்கு”  செய்யக்கூடாது  என   மனித   உரிமை    வழக்குரைஞர்   எரிக்  பால்சன்   கூறினார்.

“வேறொரு   நாளில்,  நேரத்தில்   அல்லது    இடத்தில்  (பேரணியை)   நடத்துமாறு   சிவப்புச்   சட்டையினருக்கு   உத்தவிட   வேண்டும்”,  என்று   அவர்  நேற்று  டிவிட்டரில்   பதிவிட்டிருந்தார்.

வழக்குரைஞர்    சங்க  முன்னாள்    தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசனும்     இந்தச்  சட்டத்தைக்  கொண்டு  வந்தது    அவரது    நிர்வாகம்தான்    என்பதால்    அது     குறித்து   நஜிப்    நன்றாக  அறிந்திருப்பார்   என்று  கூறினார்.

“பிரதமர்   சனிக்கிழமை   குறித்துக்    கவலைப்படுவதால்,   அவர்  அமைதிப்  பேரணிச்   சட்டம்   பகுதி  18-இன்கீழ்-   அவர்  கொண்டுவந்த   சட்டம்தான் இது-   நடவடிக்கை   எடுக்குமாறு   போலீசைப்  பணிக்க   வேண்டும்”,  என்று   அம்பிகா    டிவிட்டரில்    குறிப்பிட்டிருந்தார்.