மொனாஷ், ‘சட்ட விரோத பேரணி’ மின்னஞ்சலுக்காக மன்னிப்பு கேட்டது

monashமலேசிய   மொனாஷ்  பல்கலைக்கழகம்,   “சட்ட  விரோத  ஒன்றுகூடல்களில்”  கலந்துகொள்ளும்   மாணவர்களுக்கு   எதிராக   ஒழுங்கு    நடவடிக்கை  எடுக்கப்படும்   என்று   எச்சரிக்கும்   மின்னஞ்சல்   ஒரு   நினைவூட்டல்தான்   என்று   கூறியது.

அந்த  மின்னஞ்சல்   எழுதப்பட்டிருந்த  முறைக்காக    அது   மன்னிப்பு   கேட்டுக்கொண்டது.

“சட்டவிரோத   ஒன்றுகூடல்கள்   தொடர்பாக   மொனாஷ்   பல்கலைக்கழக   மாணவர்களுக்கு   விடுக்கப்பட்ட    அறிக்கை    எழுதப்பட்டிருந்த   முறை   குறித்து    மொனாஷ்  பல்கலைக்கழகம்   நிபந்தனையற்ற   மன்னிப்பு    கேட்டுக்கொள்கிறது.

“அந்தக்   குறிப்பு,  செய்தியின்   நோக்கத்தைச்   சரியான   முறையில்    தெரிவிக்கவில்லை.

“சட்டவிரோத   பேரணிகளில்    கலந்துகொள்வது மலேசிய     சட்டங்களுக்குப்    புறம்பானது  என்பதையும்   சட்டவிரோத    நடவடிக்கைகளில்   பங்கேற்பதன்  விளைவுகளை    மாணவர்கள்   உணர்ந்திருக்க   வேண்டும்   என்பதையும்   நினைவூட்டுவதுதான்  அதன்   நோக்கமாகும்”,  என்று   பல்கலைக்கழகத்தின்  அறிக்கை  கூறிற்று.

மொனாஷ்  பல்கலைக்கழக   மாணவர்கள்   சட்ட  விரோத   பேரணிகளில்   கலந்து  கொண்டால்   கட்டொழுங்கு   நடவடிக்கையை   எதிர்கொள்ள   நேரும்   என  அப்பல்கலைக்கழகப்  பதிவாளர்   சுசிலா   நாயர்      மாணவர்களுக்கு   மின்னஞ்சல்   அனுப்பியதாக   நேற்று      மலேசியாகினியில்    செய்தி    வெளியாகியிருந்தது.