தெரு ஆர்ப்பாட்டங்கள் நம் கலாச்சாரம்தான்: பிரதமருக்கு மரியா நினைவுறுத்து

bersihதெரு   ஆர்ப்பாட்டங்கள்    நம்  கலாச்சாரத்தின்   ஒரு  பகுதியாகவே  இருந்து   வந்துள்ளன    என்று   கூறிய   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா  நாடு   சுதந்திரம்  பெறுவதற்குமுன்   அம்னோ   பிரிட்டிஷாரை   எதிர்த்து   ஆர்ப்பாட்டம்  செய்தது   உண்டு    என்றார்.

இன்று   காலை    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   தெரு   ஆர்ப்பாட்டங்கள்   நம்  கலாச்சாரமல்ல   என்று   கூறியிருந்தது    குறித்து   மரியா   கருத்துரைத்தார்.

“அன்று     தெருவில்   இறங்கி    ஆர்ப்பாட்டம்   செய்திராவிட்டால்  இன்று  அம்னோ  இருந்திருக்காது.

“எப்படி  சுதந்திரம்    பெற்றோம்   என்பதை  நினைத்துப்   பாருங்கள்.  வரலாற்றின்   தொடக்கத்திலேயே   தெரு  ஆர்ப்பாட்டம்  செய்திருக்கிறோம்.

“எனவே,  கருத்து  மாறுபாடு  கொள்வது   நம்  உரிமை.   தெரு  ஆர்ப்பாட்டம்   என்பது   எப்போதும்   நம்  கலாச்சாரம்தான்”,  என்றாரவர்.