மலாக்கா அம்னோ தொடர்புக் குழு அதன் அடிநிலை உறுப்பினர்கள் சனிக்கிழமை பெர்சே பேரணிக்கு எதிரான சிவப்புச் சட்டைகள் பேரணியில் கலந்து கொள்ளலாம் என்று விடுத்த உத்தரவை மீட்டுக் கொள்ள வேண்டுமென அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“கடிதத்தை மீட்டுக்கொள்ளும்படியும் சிவப்புச் சட்டைப் பேரணியோ, மஞ்சள் சட்டைப் பேரணியோ, வேறு எந்த நிறப் பேரணியோ எதிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறேன்”, என்றாரவர
சிவப்புச் சட்டைப் பேரணிக்கு ஏற்பாடு செய்யும் வகையில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு வருகை புரியுமாறு கட்சி உறுப்பினர்களை அழைக்கும் ஒரு கடிதம் வலம் வருவதை அடுத்து தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார். அக்கடிதத்தை எழுதியவர் மலாக்கா அம்னோ தகவல் தலைவர் சுலைமான் முகம்மட் அலி என்று கூறப்படுகிறது.
“சிவப்புச் சட்டையினருக்கும் அம்னோவுக்கும் சம்பந்தமில்லை”, என்று தெங்கு அட்னான் கூறினார்.
மலாக்கா தொடர்புக் குழு மட்டும்தான் அப்படி ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய அவர், தம் உத்தரவுக்கிணங்க அக்கடிதம் மீட்டுக்கொள்ளப்பட்டது என்றார்.
பேரணியில் கலந்துகொள்ளும் கட்சி உறுப்பினர்களுக்கு பேராக் அம்னோ ரிம50 கொடுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுவதையும் தெங்கு அட்னான் மறுத்தார்.
அம்னோ எது செய்தாலும் அது சரி .மற்றவர்கள் உண்மை சொன்னாலும் அது தப்பு . சரிதானே தெங்கு அட்னான். அம்னோ போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்றால் ஜமால் யூனுஸ் அம்னோவில் இருந்து விலகி விட்டாரா ?
எல்லாமே கண்துடைப்பு.