சுஹாகாம்: வன்முறையாளர்களைத் தனியே பிரித்தெடுங்கள், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வோரைத் தண்டிக்காதீர்

suhakamதேசிய    மனித   உரிமை   ஆணையம் (சுஹாகாம்)  ஒரு   பேரணியின்   ஏற்பாட்டாளர்களும்  பங்கேற்பாளர்களும்  அமைதி    நோக்கத்துடன்   செயல்படுவார்களானால்  அது  அமைதிப்   பேரணிதான்   என்று  கூறியது.

பேரணிகளில்  வன்முறையில்   ஈடுபடுவோரை   போலீசார்   தனியே  பிரிக்க   வேண்டும்

“பேரணி  பங்கேற்பாளர்களை  ஒட்டுமொத்தமாக    தண்டிப்பதை    விடுத்து   வன்முறையில்   ஈடுபடுவோரை  மட்டும்   அடையாளம்  கண்டு    அவர்களைத்  தனியே  பிரிப்பதற்கு    அதிகாரிகளை   ஊக்குவிக்க    வேண்டும்”,  என்று  அது  கூறியது.

இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ் (ஐஜிபி)   காலிட்   அபு   பக்கார்   பெர்சே   5   மற்றும்   சிவப்புச்  சட்டையினர்  பேரணி   இரண்டுமே     சட்டவிரோத   பேரணிகள்தான்   என்றும்   இரண்டையும்   தடுத்து   நிறுத்த   வேண்டும்   என    அறிவித்திருப்பதை   அடுத்து   சுஹாகாம்     இவ்வாறு  கூறியது.

முன்னாள்   பெர்சே   தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  நடப்புச்   சட்டங்களைப்  பயன்படுத்தி   பெர்சே   பேரணியும்   அதற்கு   எதிரான    சவப்புச்   சட்டைப்   பேரணியும்   ஏக  காலத்தில்   நடப்பதைத்   தடுக்கலாம்  என்றார்.

ஆனால்  ஐஜிபி,   சட்டத்தை   மதிக்காதவர்கள்  ஏன்  பாதுகாப்பை    நாடுகிறார்கள்     என்று   வினவினார்.

பேரணிகளைக்   கண்காணிக்கப்   போவதாக   தெரிவித்த   சுஹாகாம்   அதிகாரிகள்    ஆர்ப்பாட்டக்காரர்களிடம்   நிதானமாகவும்   சட்டத்துக்கு  இணங்கியும்   நடந்து  கொள்ள   வேண்டும்   என்று  கேட்டுக்கொண்டது.

“ஆர்ப்பாட்டக்காரர்களும்   சொத்துகளுக்குச்   சேதம்   விளையாமல்   பார்த்துக்  கொள்ள  வேண்டும்”,  என்று  வலியுறுத்திய    சுஹாகாம்,  ஏற்பாட்டாளர்களும்   பேரனிப்   பங்கேற்பாளர்கள்   சட்டத்தை   மீறாதிருப்பதை   உறுதிப்படுத்தி    போலீசாருடன்   ஒத்துழைக்க   வேண்டும்    என்று   கூறியது.