எதிர்ப்பு பேரணிக்கு வேறொரு நாளை தேர்ந்தெடுக்குமாறு சிவப்புச் சட்டையினரிடம் போலீஸ் கூற வேண்டும், பெர்சே

 

Bersih-pickanotherdateபெர்சே பேரணிக்கு எதிரான சிவப்புச் சட்டையினரின் பேரணியை வேறொரு நாளில் நடத்துமாறு போலீஸ் சிவப்புச் சட்டையினரிடம் கூற வேண்டும் என்று பெர்சே இன்று போலீசாரிடம் கூறியுள்ளது.

எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு மாற்று தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிடும் கடமையை அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம் 2012 செக்சன் 18 அதிகாரிகளுக்கு அளித்துள்ளதை பெர்சே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

( PAA Act 2012, Section 18 reads, “If the Officer in Charge of Police District receives a notification of a counter assembly and it is evident that the organization of the counter assembly will cause conflict between the participants of the assemblies, the Officer in Charge of the Police District shall give an alternative for the counter assembly to be organized at another time, date or place.”)

ஜமால் யுனூஸின் தலைமையில் இயங்கும் சிவப்புச் சட்டையினர் தொடக்கத்திலிருந்தே அவர்களின் பேரணி பெர்சே பேரணிக்கு எதிரானது என்று கூறிவந்துள்ளனர்.

வரும் சனிக்கிழமை, நவம்பர் 19 இல், பெர்சே போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும். பெர்சே முழுமையாக சட்டப்படி நடந்துகொண்டுள்ளது. ஆகவே, “கண்ணீர் புகை பயன்படுத்தல் மற்றும் எங்களுடைய பங்கேற்பாளர்களை கைது செய்தல் ஆகியவற்றை தவிர்க்குமாறு போலீஸை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று பெர்சேயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெர்சே அதன் ஐந்தாவது பேரணியை நாளை (சனிக்கிழமை) டாத்தாரான் மெர்தேக்காவுக்கு அருகில் நடத்துகிறது.

போலீசார் செய்ய வேண்டியதைச் செய்ய வேன்டும்

பெர்சே மற்றும் சிவப்புச் சட்டை பேரணிகளை நிறுத்துவதற்காக செய்யப்பட்ட தடை உத்தரவு மனுவை நேற்று நிராகரித்த நீதிமன்றம் செக்சன் 18 ஐ மேற்கோள் காட்டியிருப்பதை பெர்சே சுட்டிக்காட்டி அது போலீசார் சிவப்புச் சட்டையினரிடம் அவர்களின் எதிர்ப்பு பேரணியை மாற்றி நடத்துவதற்கு போதுமானதாகும் என்று கூறியுள்ளது.

நீதிபதி எஸ். நந்தபாலன் அவரது தீர்ப்பில் இவ்வாறு கூறியுள்ளார்:

“பிஎஎ [அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம்] செக்சன் 18 மோதல்களைத் தவிர்க்கும் ஒரு பாதுகாப்பு சாதனமாக செயல்படுகிறது. இதனைச் செய்வதற்கான அதிகாரம் போலீஸிடம் இருக்கிறது…”