பெர்சே தலைவர் மரியா கைது செய்யப்பட்டார்

 

Maria arrestedபெர்சேயின் தலைவர் மரியா சின் மற்றும் பெர்சே அலுவலகச் செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் மணி 3.00 அளவில் புக்கிட் அமானைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழுவும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அதிகாரிகளும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அந்த இரண்டு மணி நேர சோதனையின் போது 10 கணினிகள், இரண்டு கைத்தொலைபேசிகள், அவர்களின் ஊதியம் பற்றிய சில ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று பெர்சே செய்திருக்கும் டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்சே தண்டனை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் பெர்சே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் சம்பந்தப்பட்டது.

மரியாவும் மன்டீப்பும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.