நாளை நடைபெறவிருக்கும் பெர்சே பேரணியால் பல சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 58 சாலை போக்குவரத்து திசை திருப்பங்கள் இருக்கின்றன.
கீழ்க்கண்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது:
டாத்தாரன் மேபேங்க் பங்சார், பிரிக்பீல்ட்ஸ் (லிட்டல் இந்தியா), மஸ்ஜித் நெகாரா மற்றும் மியூசியம் நெகாரா, சோகோ, டாத்தாரான் மெர்தேக்கா, புடு சென்ட்ரல் மற்றும் சென்ட்ரல் மார்க்கெட், பிடபுள்யுடிசி மற்றும் சௌகிட்.
நகர மையத்திற்குள் நுழைவதற்கு மாற்று வழிகளையும் பொது போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்துமாறு கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் கேட்டுக்கொண்டார்.
போக்குவரத்து திசை திருப்பங்கள் காலை மணி 7.00 லிருந்து பெர்சே பேரணி முடிவுறும் வரையில் அமலில் இருக்கும் என்றும் அவ்ர் கூறினார்.
போக்குவரத்து திசை திருப்பங்கள் சாலை தடுப்புகள் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.
























