பெர்சே தலைவர்களை கைது செய்ததற்காக ஜமால் போலீஸை பாராட்டினார்

Hungryredshirts

பெர்சே தலைவர் மரியா மற்றும் பெர்சே அலுவலக செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை கைது செய்ததற்காக சிவப்புச் சட்டை தலைவர் ஜமால் யுனூஸ் போலீசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆனால், பெர்சே பேரணிக்கு எதிரான பேரணியை நாளை நடத்தவிருக்கும் ஜமால் தற்போது எங்கிருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது.

இது வரையில் போலீசார் ஜமாலின் உதவியாளர் ரஸாலி ஸக்காரியாவை மட்டுமே கைது செய்துள்ளனர்.

ஜமால் விடுத்துள்ள அறிக்கையில் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மரியா மற்றும் மன்டீப் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

மலாய்க்காரர்கள் பெர்சேயிக்கு ஆதரவு அளிப்பதை அவர் கண்டித்துள்ளார்.