அமைதியான ஒருங்கு கூடுதல் சட்ட விதி 18 ஐ போலீஸ் அமல்படுத்த வேண்டும், மனோகரன்

Manogaranஒரு பேரணி நடக்கும் போது இன்னொரு எதிர்ப்பு பேரணி அதே  நாளில், அதே நேரத்தில் நடத்த மாவட்ட போலீஸ் தலைவர் அனுமதிக்கக்கூடாது. மாறாக வேறொரு நாளையும் இடத்தையும் குறிப்பிட வகை செய்யும் அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம் 2012, செக்சன்கள் 17 மற்றும் 18 ஆகியவற்றை போலீஸ் சனிக்கிழமை நடைபெறும் பெர்சேramakrishnan1 பேரணி மற்றும் சிவப்புச் சட்டையினரின் எதிர்ப்பு பேரணி விவகாரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தெலுக் இந்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரனும் முன்னாள் செனட்டர் எஸ். ராமகிருஷ்ணனும் இன்று பெட்டாலிங் ஜெயா சீபார்க் போலீஸ் நிலையத்தில் செய்த புகாரில் கேட்டுக் கொண்டனர்.