கோலாலும்பூர் தெருக்களில் பெர்சே மற்றும் சிவப்புச் சட்டையினர்

bersihபெர்சேயும்   சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்   முகம்மட்   யூனுஸ்   தலைமையில்    செயல்படும்   சிவப்புச்   சட்டையினரும்   ஏக   காலத்தில்   பேரணி   நடத்த   முற்பட்டதால்    கோலாலும்பூர்   தெருக்களில்   பதற்றம்  மிகுந்துள்ளது.

பெர்சே   கூட்டமைப்பு   தேர்தல்   மற்றும்   ஜனநாயக   சீரமைபுக்காகவும்   1எம்டிபி   ஊழல்    தொடர்பில்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   பதவி  விலகக்  கோரியும்  போராடுகிறது .

ஜமால்,  பெர்சே   எங்கு  பேரணி   நடத்தினாலும்   அதைத்   தடுத்து   நிறுத்தப்போவதாக  சூளுரைத்துள்ளார்.

போலீசார்   இரண்டு   பேரணிகளுமே    சட்டவிரோதமானவை    என்று   அறிவித்துள்ளனர்.  பேரணிகளைக்   கண்காணிக்க    போலீஸ்  படையும்   களமிறக்கப்பட்டுள்ளது.