சிவப்புச் சட்டையினர் அவர்களின் ஒன்றுகூடும் இடமான பாடாங் மெர்போக் சென்றடைந்தனர். அந்த அணியினர் அசம்பாவிதம் ஏதுமின்றி அந்த இடத்தைச் சென்றடைந்தது அவர்கள் அமைதியை விரும்புவர்கள் என்பதைக் காண்பிப்பதாக அம்னோ இளைஞர் செயல்குழு உறுப்பினர் அர்மண்ட் அழா கூறினார்.
அடுத்து என்ன என்று வினவியதற்கு “ஓய்வெடுக்கப் போகிறோம்” என்றார்.
“நாங்கள் அமைதியில் நாட்டம் கொண்டவர்கள் என்பதைக் காண்பிக்க விரும்பினாம். இன்று நடந்தவை சிவப்புச் சட்டையினரை வன்முறையாளர்கள் , கடும்போக்காளர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறு என்பதை நிரூபிக்கிறது.
“நாங்கள் போலீஸ் உத்தரவுப்படி நடந்து கொண்டோம்”, என்றார்.
நீங்கள் அமைதி விரும்பிகள் என்றால், உங்கள் பேரணியை வேறு ஒரு நாளில் நடத்தி இருக்கலாமே…. நாங்கள் தேர்ந்தேடுத்த அதே நாளில் நீங்களும் பேரணி நடத்துகிறீர்களே… உங்களை எப்படி அமைதி விரும்பிகள் என்று எண்ணுவது? அரசாங்கம் உங்கள் கையில் இருக்கிறது என்ற திமிர்தானே ……
நாங்கள் நம்பிட்டோம்
நீங்கள் அமைதி விரும்பி என்பதை பன்னாடை மக்கள் சக்தி கட்சியிடம் சொல்லுங்கள் .ஆடு நனைத்துன்னு ஓநாய் அழுவுது உங்களுக்கு பொருந்தும்.