பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா பாதுகாப்புக் குற்ற(சிறப்பு நடவடிக்கை)ச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ் செய்தியில் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரும் அதை உறுதிப்படுத்தினார்.
அவருடன் கைதான இதர ஒன்பது பேரும் விசாரணைக்காக இரண்டு நாள்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதனிடையே, பெர்சேயின் டிவிட்டர் செய்தி பாசீர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் ஹொவர்ட் லீ கைது செய்யப்பட்டு கோலாலும்பூர் போலீஸ் தலைமையகம் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியது.