‘நல்ல கூட்டம்’ என்று மகாதிர் பாராட்டு

bersatuடட்டாரான்   மே  பேங்   வந்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்  பெர்சே  5  பேரணிக்கு   நிறைய  பேர்  திரண்டு   வந்திருப்பதாக   பாராட்டினார்.

“நிறைய   பேர்   வந்துள்ளனர்.  அரசாங்கம்தான்   ஆர்ப்பாட்டம்   செய்யும்  மக்களின்   உரிமையைக்   கோழைத்தனமாகத்   தடுக்கப்   பார்க்கிறது. இந்த  உரிமை   அரமைப்பிலேயே   இருக்கிறது”,  என்றாரவர்.

பேரணியில்   சீனர்கள்தான்   அதிகமா   என்று   வினவியதற்கு    இனம்  பற்றிய   பேச்சுக்கே   இடமில்லை   என்றார்.

“எல்லாருமே   இப்போதுள்ள   அரசாங்கம்   குறித்து   கவலை    கொண்டிருக்கிறார்கள்”,  என்றவர்  சொன்னார்.

கடந்த  பேரணியை   விட    கூட்டம்  குறைவுதான்   என்பதைச்  சுட்டிக்காட்டியதற்கு,  “நாங்கள்   தொடர்ந்து  ஏதாவது      செய்து    கொண்டிருக்கிறோம்.  அரசாங்கம்   மக்களின்  அமைதிப்   பேரணியைத்    தடுக்க      போலீசைப்   பயன்படுத்துகிறதே”,  என்றார்.

போலீஸ்   தடுப்புகள்   பற்றிக்  கருத்துரைத்த   முன்னாள்  பிரதமர்,  போலீசார்   அவர்களின்  கடமையைச்   செய்கிறார்கள்   என்று  குறிப்பிட்டார்.

“ஆனால்,  நாங்கள்  அமைதி  வழியில்தான்    நடந்து  கொள்கிறோம்.  இங்கு   தடுப்பு  அரண்கள்    தேவையில்லை.  இதைத்தான்  ஜனநாயகத்துக்குக்  குழிபறித்தல்   என்பது   மற்றபடி   பெர்சே  ஒன்றும்   ஜனநாயகத்துக்குக்  குழி  பறிக்கவில்லை”,  என  மகாதிர்   கூறினார்.